/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வேன்கவிழ்ந்து விபத்து:15 பேர் படுகாயம்வேன்கவிழ்ந்து விபத்து:15 பேர் படுகாயம்
வேன்கவிழ்ந்து விபத்து:15 பேர் படுகாயம்
வேன்கவிழ்ந்து விபத்து:15 பேர் படுகாயம்
வேன்கவிழ்ந்து விபத்து:15 பேர் படுகாயம்
ADDED : மே 25, 2010 01:14 AM
தூத்துக்குடி:தூத்துக்குடியில் இருந்து புளியம்பட்டி கோவிலுக்கு சென்று வந்த வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 15 பேர் காயம் அடைந்தனர்தூத்துக்குடி பாத்திமாநகரைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு ஒரு மினிவேனில் புளியம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.
அவர்கள் நேற்று அதிகாலையில் தூத்துக்குடிக்கு திரும்பி வந்தனர். அவர்கள் வேன் பொட்டலூரணி விலக்கு அருகில் திடீரென நிலை தடுமாறி ரோட்டில் கவிழந்தது. இந்த விபத்தில் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ஜேசுராஜ்(12), மரியம்மாள்(37), மேகலா(14), அஜந்தா(18), பாஸ்கர்(16), அந்தோணியம்மாள்(37), அணிஸ்(23), வில்சென்ட்(49), லதா(46), ஜாய்சன்(12), ராபட்ஸ்டன்(14), ஸ்டெபினா(14), ஜேஸ்மின்(15), அருளப்பன்(39) ஆகிய 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.